October 17, 2017
தண்டோரா குழு
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட் குத்துவிளக்கேற்றி தீபாவளி பண்டிகை கொண்டாடியுள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட் இந்திய கலாச்சாரம் மற்றும் தமிழ் பண்டிகைகளைக் கொண்டாடுவதில் ஆர்வம் உடையவர்.இந்நிலையில், கனடா தலைநகர் ஒட்டாவாவில், இந்திய மக்கள் முன் குத்துவிளக்கேற்றி தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார்.இந்த தீபாவளி கொண்டட்டத்தின் போது கனடாவுக்கான இந்தியத் தூதர் விகாஸ் ஸ்வரரூப் உடன் இருந்தார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
நாங்கள் இன்றிரவு தீபாவளியை ஒட்டாவாவில் கொண்டாடுகிறோம்.’தீபாவளி வாழ்த்துகள்.’ என்று அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.