• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹேமாமாலினியின் சுயசரிதைக்கு முன்னுரை எழுதிய பிரதமர் மோடி

October 16, 2017 தண்டோரா குழு

பிரபல ஹிந்தி நடிகை ஹேமா மாலினியின் சுயசரிதைக்கு முன்னுரையை இந்திய பிரதமர் எழுதிய நிகழ்ச்சி பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

‘ஸ்டார்டஸ்ட்’ என்னும் சினிமா பத்திரிக்கையின் தயாரிப்பாளர் மற்றும் அதன் முன்னாள் ஆசிரியரான ராம்கமல் முகர்ஜி,நடிகை ஹேமா மாலினியின் ‘தி டிரீம் கேர்ள் பியாண்ட்’ என்னும் சுயசரிதையை எழுதினார்.

பிரபல இந்திய நடிகர் ஹேமா மாலினி தனது 69 வயது பிறந்த நாளை இன்று(அக்டோபர் 16ம் தேதி கொண்டாடுகிறார்.அவருடைய பிறந்த நாள் விழாவின்போது, அந்த சுயசரிதை வெளியிடப்படுகிறது. அந்த சுயசரிதையின் முன்னுரையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஹேமஜி மீது அவர் கொண்டுள்ள உணர்ச்சிகளை பற்றி பிரதமர் நரேந்திர மோடி மிக சுருக்கமாகவும்,இனிமையாகவும் எழுதியுள்ளார். ஒரு பாலிவுட் நடிகருக்கு எழுதப்பட்ட புத்தகத்தில், ஒரு பிரதமர் அதன் முன்னுரையை எழுதியிருப்பது, பத்திரிக்கை ஆசிரியராக எனக்கும் நடிகரான ஹேமாஜிக்கும் மிகவும் பெருமையாக இருக்கிறது.

“இந்திய பிரதமர் நரேந்திர மோடிஜி,எனது சுயசரிதைக்கு முன்னுரை எழுதியிருக்கிறார் என்பதை நான் கவுரமாக நினைக்கிறேன் “என்று ஹேமா மாலினி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க