October 14, 2017
தண்டோரா குழு
கர்நாடக முன்னாள் அமைச்சர் யோகேஷ்வர் காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீர் விலகினார்.
கர்நாடகவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவுமான யோகேஷ்வர் இன்று திடீரென்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.
கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான முந்தைய பா.ஜ.க. ஆட்சியின் போது அமைச்சர் பதவி வகித்தவர் சி.பி. யோகேஷ்வர்.இதனையடுத்து கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பா.ஜ.க.வில் இருந்து காங்கிரசுக்கு சென்றார்.பின்பு சென்னப்பட்டினாவில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில்,காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக யோகேஷ்வர் இன்று அறிவித்துள்ளார்.மேலும்,ராஜினமா முடிவை மாநில காங்கிரஸ் தலைவருக்கு ஏற்கனவே அனுப்பிவிட்டதாகவும், அடுத்தக்கட்ட முடிவை வரும் 22 ம் தேதிக்கு அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.