• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா கைரேகை வழக்கில் மருத்துவர் பாலாஜி அக். 27-ல் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

October 13, 2017 தண்டோரா குழு

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கடிதத்தின் அடிப்படையிலேயே ஜெயலலிதாவின் கைரேகை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த போது திருப்பரங்குன்றம், அரவங்குறிச்சி மற்றும் தஞ்சை இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களின் ஃபாம் பீ படிவத்தில் ஜெயலலிதாவின் கையெழுத்துக்கு பதிலாக கைரேகை வைக்கப்பட்டதை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அவர், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கடிதத்தின் அடிப்படையிலேயே ஜெயலலிதாவின் கைரேகை ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் கைரேகையுடன் ஜெயலலிதா உடல்நிலை குறித்த விளக்கம் இல்லை என்று கூறினார்.

மேலும், மதுசூதனன் விளக்கம் அளிக்க பொதுச்செயலாளர் அனுமதி அளித்தாரா என்ற நீதிபதியின் கேள்விக்கு முதன்மை செயலாளர் இல்லை என பதில் அளித்தார்.இதையடுத்து, இந்த வழக்கில் ஜெயலலிதா கைரேகையை அங்கீகரித்த டாக்டர் பாலாஜி 27-ம் தேதி ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க