• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம் – அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

October 13, 2017 தண்டோரா குழு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு சென்னையில் இன்று முதல் தொடங்கியது. சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு சிறப்பு கவுன்டர்களை போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சென்னை கோயம்பேட்டில் திறந்து வைத்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்வதற்கு சென்னையில் 29 சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.மேலும், வரும் 15, 16, 17ம் தேதிகளில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கனரக வாகனங்கள் மதியம் 2 மணி முதல் இரவு 2 மணிக்கு நகருக்குள் வர அனுமதியில்லை.நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அரசுப்பேருந்துகள் செல்வதற்காக தனி வழிகள் அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க