October 12, 2017
தண்டோரா குழு
டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருக்கிறது. இதனையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்த புகாரின் பேரில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி தெரிவித்துள்ளார்.மேலும்,குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவை பதவிக்காலம் 2018 ஜனவரியோடு முடிகிறது.குஜராத் மாநிலத்தில் 182 சட்டபேரவைத் தொகுதிகளுக்கும், இமாச்சல் பிரதேசத்தில் 68 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது.இதனையடுத்து குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.