• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை !

October 12, 2017 தண்டோரா குழு

கோவை உக்கடம் ஜி.எம்.நகர் பகுதியை சேர்ந்த சுபேர் என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சிறப்பு புலனாய்வு தனிப்படை விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை உக்கடம் கோட்டைப்புதுர் ஜி.எம் நகரைச்சேர்ந்த சுலைமானின் மகன் சுபேர்( 33 ).இவர் பாலக்காட்டிலிருந்து ஒலவக்கோடு செல்லும் வழியில் அப்ஹோல்சரி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வேலை முடித்து வீடு திரும்பாததால் நேற்று அவரது குடும்பத்தினர் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் காவல்துறை துணை ஆணையாளரை சந்தித்து சுபேர் குறித்து விசாரித்தனர்.பின்னர் மாநகர காவல்துறை ஆணையாளரையும் சந்தித்து பேசினர்.

அவர்களிடம் சுபேரை பிடித்து சிறப்பு புலனாய்வு தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்ததாகவும்.இன்று காலை சுபேரை, குடும்பத்தினர் சந்திக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்ததாக சுபேரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

அபுதாஹீர் வழக்கில் தொடர்பு உள்ளதா என குடும்ப உறுப்பினர்களிடம் காவல்துறை அதிகாரிகள் கேட்டதாகவும் கூறினர். மேலும் சுபேதர் மீது காவல்துறையில் எந்த வழக்கும் இல்லை என தெரிவித்தனர்.

மேலும் படிக்க