• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மதுரை ஆதினம் மடத்துக்குள் நித்தியானந்தா நுழைய தடை

October 11, 2017 தண்டோரா குழு

மதுரை ஆதினம் மடத்துக்குள் நித்தியானந்தா நுழைய உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

அருணகிரிநாதரின் நிர்வாகத்தில் தலையிடவும் ,ஆதீன மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு நிரந்தர தடை விதிக்கவும் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நேற்று மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன் நேற்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு இன்று நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, எக்காரணத்தைக் கொண்டும் நித்யானந்தா மடத்துக்குள் நுழையக் கூடாது. நான்கு வாரக் காலத்திற்கு இந்த தடை நீடிக்கும்.நான்கு வாரக் காலத்திற்குப் பின் மீண்டும் விசாரணைக்கு வரும் போது,நித்யானந்தா தரப்பினரும், அரசு தரப்பில் தலைமைச் செயலாளர், அறநிலையத் துறைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.

மேலும் படிக்க