• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகலாவின் பரோல் இன்றுடன் முடிவடைகிறது

October 11, 2017 தண்டோரா குழு

சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் சசிகலா கணவர் நடராஜனுக்கு சிறுநீரகம், கல்லீரல் செயலழிந்துவிட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு, சில தினங்களுக்கு முன், உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.

அவரை பார்க்க 15 நாள் பரோல் கேட்டு கர்நாடக சிறை நிர்வாகத்திடம் சசிகலா விண்ணப்பித்தார்.ஆனால் சசிகலாவிற்கு 5 நாள் பரோல் வழங்கி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை உத்தரவிட்டது.

பரோலில் வெளியே வந்த சசிகலா, தனது கணவர் நடராஜனை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில், சசிகலாவின் 5 நாள் பரோல் இன்றுடன் முடிவடிகிறது. இதையடுத்து, நாளை மாலை 5 மணிக்குள் மீண்டும் சிறைக்குள் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க