ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லா அருகே உள்ள தர்களி கிராமத்தில் தற்போது பாரம்பரிய திருவிழாவான ராமர் சண்டை எனப்படும் நரட்டி விழா நடைபெற்று வருகிறது.
இந்தவிழா அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மலை மீது உள்ள லட்சுமி நாராயணாவை தரிசித்து ஆசிபெறுவதற்கான விழாவாக பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர். சிம்லாவைச் சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் மலையடிவாரத்தில் ஒன்றுகூடி அங்கிருந்து மலைப் பயணத்தைத் தொடர்வார்கள்.
அப்போது அவர்களது பாரம்பரியத் தொழிலான ஆடுவளர்ப்பை மேம்படுத்தும் விதமாக அங்குள்ள மந்தைகளில் தங்களிடம் உள்ள வலிமையான ஆட்டை அழைத்து வந்து மற்றவர்கள் கொண்டுவரும் ஆடுகளுடன் சண்டைக்கு விடுவார்கள்.
இதில் வெற்றிபெறும் ஆட்டிற்குப் பரிசுகளும் வழங்கப்படும். இவ்வாறு செய்வதன்மூலம் தங்களது மலைப்பயணம் இனிமையாக அமையும் எனவும், கடவுளின் ஆசிவாதம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். இது குறித்து கூறிய அப்பகுதியைச் சேர்ந்த கலா குமாரி, இந்த ஆட்டுச்சண்டை பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. இதை ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் குழந்தைகளும் விரும்பிப் பார்ப்போம். இது திருவிழாவின் ஒரு பகுதி எனத் தெரிவித்தார்.
இது குறித்து இந்தப் போட்டிகளை முன்னின்று நடத்தும் சேட்டன் பக்ல என்பவர் கூறும்போது, இங்கு ஆடு வளர்ப்பு தான் பிரதானத் தொழில் அதனால் அவரவர்கள் திறமைக்கு ஏற்ப ஆடுகளை வளர்கின்றனர். எனவே காலம் காலமாக இங்கு ஆட்டுச்சண்டை நடைபெற்று வருகிறது.
இதன்மூலம் அதிக வீரியம் கொண்ட ஆண் ஆடுகளை இனம்கண்டு பின்னர் இன விருத்திக்குப் பயன்படுத்துவர். இதனால் நல்ல தரமான ஆடுகள் கிடைப்பதுடன் மக்களுக்கு நல்ல லாபம் கிடைத்து வருகிறது எனத் தெரிவித்தார்.
பழைய சடங்குகள் அனைத்தும் தடை செய்யவேண்டும் என ஒரு சிலர் கூறிவரும் நிலையில் பழைய சடங்குகள் அனைத்தும் ஏதோ ஒரு காரணத்திற்கு தான் எனப் புரிய வைக்கின்றனர் இந்த மலைவாழ் மக்கள்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு