October 10, 2017
தண்டோரா குழு
நடிகர் சந்தானம் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் கட்டிடங்களை கட்டி விற்பனை செய்யும் பில்டராக தொழில் செய்து வருகிறார். இவருடன் நடிகர் சந்தானம் சென்னை குன்றத்தூர் அருகே பெரிய கட்டிடம் ஒன்றைக் கட்ட முயன்றதாகவும் பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சண்முகசுந்தரத்திற்கும் சந்தானத்திற்கும் இடையே பணத்தகராறு இருந்து வந்த நிலையில் நேற்று மாலை சந்தானம் தனது மேனேஜர் ரமேஷ் உடன் வளசரவாக்கத்தில் உள்ள சண்முகசுந்தரம் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது.
இதையடுத்து, இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கி கொண்டதாகவும் மோதலில் அவர்கள் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த ச