• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் ஜெய்க்கு 6 மாதங்கள் கார் ஓட்ட தடை

October 7, 2017 தண்டோரா குழு

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஜெய்க்கு ரூ.5,200 அபராதம் விதித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ஜெய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடித்து விட்டு தனது காரினை போதையில் ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்தியதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, இதையடுத்து அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று கூறப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனால் தற்போது அவருக்கு நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்து ஆணையிட்டுள்ளது.

மேலும், நடிகர் ஜெய்யை 2 நாட்களில் கைது செய்து ஆஜர்படுத்த சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்திரவிட்டது. இதையடுத்து, நடிகர் ஜெய் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

இந்நிலையில், குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஜெய்க்கு ரூ.5,200 அபராதம் விதித்தும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும், 6 மாதங்களுக்கு கார் ஓட்டவும் தடை விதித்து நீதிபதி ஆப்ரஹாம் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க