• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓவியா அளித்தபேட்டியால் எழுந்துள்ள சர்ச்சை

October 6, 2017 தண்டோரா குழு

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவை பேட்டியெடுக்க அனைத்து ஊடகங்களும் முயற்சி செய்தது.எனினும், அவர் யாருக்கும் பேட்டி அளிக்கவில்லை.

இதற்கிடையில், ஒரே ஒரு போட்டோ ஷூட்டில் அவர் கலந்து கொண்டார்.அப்போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “மக்கள் எனக்கு அளவிற்கு மிகுதியான ஆதரவை தருகின்றனர், இது அன்பால் சேர்ந்த கூட்டம், நான் யாருக்கும் பிரியாணி போட்டு இந்த கூட்டத்தை கூட்டவில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், “தற்போது எனக்கு ஒரு பிரச்சனை என்றால் தமிழகத்தில் நான் எந்த வீட்டிற்கு வேண்டுமானாலும் செல்லுவேன், ஏனெனில் என்னை எல்லோரும் அவர்கள் குடும்பத்தில் ஒருவராக பார்க்கின்றனர்” என்று கூறினார்.

இந்நிலையில் ஓவியா , நான் யாருக்கும் பிரியாணி போட்டு இந்த கூட்டத்தை கூட்டவில்லை” என யாரை பற்றி சொன்னார் என்ற சர்ச்சை மக்களிடையே எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க