• Download mobile app
17 Sep 2026, ThursdayEdition - 3872
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார்

October 6, 2017 தண்டோரா குழு

உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவர் நடராஜனை சந்திக்க சசிகலா 5 நாள் பரோலில் பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வந்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

இதனால், சசிகலா பரோலில் வெளிவந்து மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ள தனது கணவரை சந்திப்பதற்காக 15 நாட்கள் பரோல் கேட்டிருந்தார்.

இதையடுத்து சசிகலாவிற்கு 18 நிபந்தனைகளை விதித்து கர்நாடக காவல்துறை 5 நாட்கள் பரோல் வழங்கியுள்ளது.இதைத்தொடர்ந்து பெங்களூரு சிறையில் இருந்து 233 நாட்களுக்கு பிறகு சசிகலா வெளியே வந்துள்ளார்.

பரோல் வழங்கப்பட்ட நிலையில் இன்று இரவு விமானம் மூலம் சசிகலா சென்னைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறார். சென்னைக்கு வரும் சசிகலா தியாகராய நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க