• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இறுதி விசாரணையை ஒத்திவைக்க தினகரன் உச்சநீதிமன்றத்தில் மனு

October 6, 2017 தண்டோரா குழு

இரட்டை இலை சின்னம் தொடா்பாக இன்று மாலை நடைபெற உள்ள இறுதி விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளாா்.

அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதைத் தொடா்ந்து கட்சியின் பெயா் மற்றும் சின்னம் தோ்தல் ஆணயத்தால் முடக்கப்பட்டு,தேர்தல் ஆணையத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.இவ்வழக்கில்
ஓ.பன்னீர்செல்வம் , எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்கள் மற்றும் டி.டி.வி.தினகரன், தீபா ஆகியோர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்கள் அடிப்படையில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், தோ்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று உயா்நீதிமன்ற மதுரை கிளையில் தினகரன் சாா்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனு நேற்று(அக் 5) தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அக் 6ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தேர்தல் ஆணைய இறுதி விசாரணையை ஒத்திவைக்க கோரி தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மேலும் கூடுதல் ஆவணம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க