• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசியல் ரீதியாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாது – புதிய ஆளுநர்

October 6, 2017 தண்டோரா குழு

அரசியல் ரீதியாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவியேற்றார். அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பதவி ஏற்றப்பின் பேசிய பன்வாரிலால் புரோகித்,

தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன். நிர்வாகத்தின் வெளிப்படை தன்மையை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்பேன்.அரசியலமைப்பு சட்டத்தின் படி செயல்படுவேன்.அரசியல் சட்டத்தை காப்பது எனது கடமை. அரசியல் ரீதியாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாது. அரசின் செயல்பாடுகளை பொறுத்து எனது ஆதரவு இருக்கும் என்றார்.

புதிய ஆளுநர் பதவியேற்பு விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க