• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

3 பில்லியன் யாஹூ வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு

October 5, 2017 தண்டோரா குழு

3 பில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்கல் 2013 ஆம் ஆண்டு திருடப்பட்டுள்ளதாக யாஹூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டது இணையத்தளமான யாஹூ நிறுவனத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு மர்ம நபர்கள் ஹாக் செய்யப்பட்டது.மேலும்,தனது வாடிக்கையாளர்களின் கணக்கு திருடப்பட்டிருப்பதாக அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் அதன் உண்மையான எண்ணிக்கையை கூறவில்லை.

தற்போது யாகூவின் புதிய நெட்வொர்கிங் கம்பெனியான வெரிசோன் கம்யூனிகேஷன்ஸ் உண்மையான எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.மேலும் இது தொடர்பாக விளக்கம் ஒன்றை யாஹூ நிறுவனம் அளித்துள்ளது. இதில் வாடிக்கையாளர்களின் பாஸ்வேர்டு,வங்கி கணக்குகள் தொடர்பான தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்படவில்லை எனவும் வேறு தகவல்கள் தான் திருடப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறது.

இச்சம்பவம் குறித்து சைபர் கிரைம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். திருடப்பட்ட தகவல்களில் பயனாளர்களின் கடவுச்சொல், வங்கி கணக்கு சம்பந்தமான தகவல்கள், பேமென்ட் கார்ட் சம்பந்தமான தகவல்கள் திருடப்படவில்லை என்று அந்த விசாரணையின் முடிவில் தெரியவந்துள்ளது.

வெரிசோன் கம்யுனிகேசன் பிரைவேட் லிமிடெட், கடந்த ஜூன் மாதம் 4.8 பில்லியன் டாலருக்கு யாஹூ இணையதளத்தை வாங்குவதாக இருந்தது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் யாஹூ இணையதளத்தின் பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டதையடுத்து, 35௦ மில்லியன் ரூபாயை வெரிசோன் நிறுவனம் குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க