• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு பதிவு

October 4, 2017 தண்டோரா குழு

மோடி குறித்து விமர்சனம் செய்ததாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையை பிரதமரின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகிறார் எனவும் தன்னைவிட மிகச்சிறந்த நடிகர் என்பதை பிரதமர் நிரூபித்திருக்கிறார் எனவும் கூறினார்.

மேலும் தன்னுடைய ஆதரவாளர்களின் செயலை மோடி ஆதரிக்கிறாரா என கேள்வி எழுப்பிய பிரகாஷ்ராஜ் இதுபோன்ற கொடூரச் சம்பவங்களில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌனமாக இருந்தால், தன்னுடைய தேசிய விருதுகளை அரசிடம் திருப்பி அளிக்கவும் தயங்க மாட்டேன் என கூறினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்தாக நடிகர் பிரகாஷ்ராஜ் லக்னோ நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு அக்டோபர் 7ம் தேதி விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க