• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் மாநகராட்சியை கண்டித்து திமுகவினர் ஆர்பாட்டம்

October 4, 2017 தண்டோரா குழு

திருப்பூரில் மாநகராட்சி நிர்வாக சீர் கேட்டை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் அடிப்படை வசதிகளான குடிநீர் விநியோகம் சீரான முறையில் விநியோகிக்காததை கண்டித்தும், தெருவிளக்கு வசதி,சாக்கடை வசதி, மேலும் நாட்கணக்கில் சுத்தம் செய்யப்படாத சாக்கடைகளினால் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவுவதை கண்டித்தும் இன்று திமுக சார்பில் மாநகராட்சி நிர்வாகத்தின் சீர்கேடை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் முதலாம் அலுவலகம் அமைந்துள்ள வேலம்பாளையம் காந்தி நகர் பேருந்து நிலையம் அருகே இந்த கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கழகச்செயலாளரும் முன்னாள் மேயருமான க. செல்வராஜ் உள்பட நூற்றுக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டு மாநகராட்சிக்கு எதிராக கோக்ஷங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க