• Download mobile app
02 May 2026, SaturdayEdition - 3734
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நியூசி.,யை தூசியாக்கிய இளம் இந்திய ‘ஏ’ அணி!

October 4, 2017 tamilsamayam.com

நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமில்லாத டெஸ்ட் தொடரை இந்திய ‘ஏ’ அணி 2-0 என கைப்பற்றியது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து ‘ஏ’ அணி முதலில் இரண்டு அதிகாரப்பூர்வ இல்லாத டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் இந்திய ‘ஏ’ அணி வென்றது. இரு அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் விஜயவாடாவில் நடந்தது.

இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து ‘ஏ’ அணி, 211 ரன்கள் எடுத்தது. இந்திய ‘ஏ’ அணி 447 ரன்கள் குவித்தது. இதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த நியூசிலாந்து ‘ஏ’ அணி, துவக்கம் முதல் ஷாபாஸ் நதீம், கரண் சர்மா சுழலில் தடுமாறியது.

அந்த அணியிம் நிகோலஸ் (94), ரவால் (47) ஆகியோர் தவிர, மற்ற யாரும் சொல்லுக்கொள்ளும் அளவுக்கு ரன்கள் சேர்க்கவில்லை. இதையடுத்து அந்த அணி இரண்டாவது இன்னிங்சில் 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன் மூலம் இந்திய ‘ஏ’ அணி ஒரு இன்னிங்ஸ் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 2-0 என கைப்பற்றி அசத்தியது. தொடர்ந்து 5 அதிகாரப்பூர்வமில்லாத ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் இந்திய ‘ஏ’ அணியை நியூசிலாந்து ‘ஏ’ அணி எதிர்கொள்கிறது.

மேலும் படிக்க