October 3, 2017
தண்டோரா குழு
ஆந்திர மாநிலத்தில் பெண் ஒருவருக்கு பாகுபலி படம் பார்த்தபடியே அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
அரசு மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிபவர் வினயகுமாரி. இவருக்கு திடீரென்று வலிப்பு நோய் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துப்பார்த்ததில் தலையில் அவருக்கு ரத்தம் உறைந்திருப்பது தெரியவந்தது. இதனால் அறுவைசிகிச்சை மூலம் ரத்த உறைவை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.
எனினும், அறுவை சிகிச்சை நடக்கும்போது வினயகுமாரி தூங்கக் கூடாது என்பதால் அவருக்கு பாகுபலி படம் திரையிட்டு காட்ட முடிவு செய்யப்பட்டது.இதற்கான சிறப்பு ஏற்பாட்டை மருத்துவமனை நிர்வாகம் செய்தது.
இதனையடுத்து திரையில் பாகுபலி படம் ஓடத் தொடங்கியதும் ஆபரேஷன் தொடங்கப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.