• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திரையரங்கில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது மாற்றுதிறனாளிக்கு ஏற்பட்ட அவமானம்

October 3, 2017 தண்டோரா குழு

அசாமில் திரையரங்கில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, மாற்றுதிறனாளி எழுந்து நிற்கவில்லை என்பதால், அவரை அங்கிருந்த சிலர் அவமானப்படுத்தி உள்ளனர்.

அஸ்ஸாம் மாநிலத்தில் குவஹாத்தி நகரில் அர்மான் அலி என்பவர் வசித்து வருகிறார். அவர் ஒரு மாற்றுதிறனாளி. திரைப்படம் பார்க்க அவர் திரையரங்கிற்கு சென்றிருந்தார்.திரைப்படம் தொடங்குவதற்கு முன், இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது.ஆனால் அவரால் எழுந்து நிற்க முடியவில்லை. அவருக்கு பின்னால் அமர்ந்து இருந்தவர்கள், அவர் மாற்று திறனாளி என்று அறியாமல், ‘பாகிஸ்தானி’ என்று அழைத்து அவரை அவமானப்படுத்தினர்.

இது குறித்து அர்மான் கூறுகையில், “திரையரங்கில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, நான் நேராக அமர்ந்த வண்ணம் தேசிய கீதத்தை பாடிக்கொண்டிருந்தேன். நான் எழுந்து நிற்காமல், வேண்டும் என்றே அமர்ந்து இருக்கிறேன் என்று எனக்கு பின்னல் நின்றுகொண்டிருந்தவர்கள், நம் மத்தியில் ஒரு பாகிஸ்தானி அமர்ந்து கொண்டு இருக்கிறார் என்று கூறி என்னை அவமானப்படுத்தினர்.

மேலும்,இச்சம்பவம் குறித்தும், என்னை போன்றவர்கள் சந்திக்கும் அவமானங்கள் குறித்து தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பபோகிறேன்” என்று கூறினார்.

மேலும் படிக்க