ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடி வந்த நெடுவாசல் மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டம் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு நிறுவனமான ஒ.என்.ஜி.சி அறிவித்தது.இத்திட்டத்தால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும் என்று நெடுவாசல் விவசாயிகள் போராட தொடங்கினர்.மேலும், “ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு கூட்டியக்கம்” என்ற பெயரில் இயக்கத்தை கட்டமைத்து தொடர்ந்து அறவழியில் போராடி வந்தனர்.
இதனையடுத்து கடந்த ஏப்ரல் 12-ம் தேதி முதல் தங்கள் போராட்டத்தை தொடங்கினர்.இந்த போராட்டம் 174 நாட்களை கடந்த போதிலும்,தொடர்ந்து வந்தது.இந்நிலையில் தொடர் போராட்டத்தால் மக்களின் வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் போராட்டத்தை தற்காலிக வாபஸ் பெறுவதாக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் அறிவித்தார்.ஒன்ஜிசி மீண்டும் தன் பணிகளை தொடங்குமானால் மீண்டும் போராட்டம் தொடங்கும் என போராட்டக் குழு அறிவித்துள்ளது.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்