• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வட கொரியா குடியரசு தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நேரத்தை வீணாக்க வேண்டாம் – டிரம்ப்

October 2, 2017 தண்டோரா குழு

வட கொரியா நாட்டின் குடியரசு தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று அமெரிக்க குடியரசு தலைவர் கூறியுள்ளார்.

வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. உலக நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவித்தது. தங்கள் போக்கிலிருந்து மாறாமல் இருந்ததையடுத்து, ஐநா வில் புகார் அளிக்கப்பட்டது. ஐநாவும் வட கொரியாவை எச்சரித்தது. அந்த எச்சரிக்கையை மீறி வட கொரியா தனது ஏவுகணை சோதனையை செய்து வந்தது.

இதையடுத்து, அந்நாட்டின் மீது அமெரிக்கா பல தடைகளை கொண்டு வந்தது. அதை பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல், வட கொரியா தொடர்ந்து தனது ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நேற்று முன் தினம் தெரிவித்தார்.

இதையடுத்து, “சின்ன ராக்கெட் மனிதரிடம் பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம். நாம் என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்வோம்” என்று அமெரிக்க குடியரசு தலைவர் டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.கடந்த மாதம் ஐநா சபையில் பேசிய டிரம்ப், வட கொரியா குடியரசு தலைவரை சின்ன ராக்கெட் மனிதன் என்று குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க