• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீனாவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

September 30, 2017 தண்டோரா குழு

சீனாவின் சிச்சுவேசன் மாகாணத்தில் 5.5 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “சீனாவின் குவாங்யாங் நகரிலிருந்து சுமார் 78 கிலோமீட்டர்(48 மைல்) தூரத்தில், பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது” என்று தெரிவித்தது.

அந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த பகுதிக்கு அருகே இருந்த மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும், மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு சாலைக்கு ஓடி வந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் சிலர் வெளியிட்டனர். மேலும், கட்டடங்கள் குலுங்குவதையும், வீடுகள் மேலுள்ள ஓட்டுகள் கீழே விழுந்ததையும், கண்ணாடி பாட்டில்கள் கீழே விழும் காணொளியை சீன ஊடகங்கள் வெளியிட்டன. இந்த நிலநடுக்கத்தால், மின்சார இணைப்புகள் துண்டிக்கப்படவில்லை என்றும் பாதுகாப்பு கருதி ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் குவாங்யாங் மற்றும் மியான்யாங் ஆகிய மலைபகுதிகளுக்கு இடையே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் சிச்சுவான் பகுதியில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்ப்பட்டு வருகிறது. கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 70,000 பேர் உயிரிழந்தனர். அதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் சிச்சுவேசன் மாகணத்தின் பிரபல சுற்றுலா தலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 20 பேர் உயிரிழந்தனர் மேலும் 500 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க