பெங்களூரில் நடந்த பிறந்தநாள் விழாவில், குளிர்பானம் என்று நினைத்து அசிட் (sulphuric acid) குடித்த இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாஹில் ஷங்கர் என்னும் 9 வயது சிறுவன், 3-ம் வகுப்பு படித்து வருகிறான். அவன் புதன்கிழமை(செப்டம்பர் 27),தனது பிறந்தநாள் விழாவிற்கு தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து உள்ளான். இதனிடையே பிறந்த நாள் விழாவில் அவனது நண்பர்கள் இருவரும் குளிர்பானம் என்று நினைத்து அசிட் குடித்துள்ளனர். அதை குடித்த சிறுவர்கள் அங்கேயே மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து அந்த இரண்டு சிறுவர்களையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதை அறிந்த காவல்துறையினர், அந்த சிறுவர்களின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்