• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமனம் ! யார் இவர் ?

September 30, 2017 தண்டோரா குழு

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் இருந்து வந்தார். இந்நிலையில் தமிழகம், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று(செப்.,30) உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, தமிழக புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஷித் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது மேகாலயா ஆளுநராக இருந்து வருகிறார்.

யார் இந்த பன்வாரிலால் புரோஹித்?

பன்வாரிலால் புரோஹித், மகாராஷ்டிர மாநிலம், விதர்பா பகுதியில் 1940 ம் ஆண்டு ஏப்ரல் 16 ம் தேதி பிறந்தவர். இவர் அசாம் ஆளுநராக பணியாற்றி உள்ளார். நாக்பூர் லோக்சபா தொகுதியில் இருந்த 3 முறை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர்.

துவக்கத்தில் அகில இந்திய பார்வர்டு கட்சியில் சேர்ந்து பணியாற்றிய இவர் பின்னர் காங்கிரசில் இருந்து 1991 ல் பா.ஜ.,வில் இணைந்தார்.

இதுமட்டுமின்றி 1911-ம் ஆண்டு கோபால கிருஷ்ண கோகலே தொடங்கிய, 100 ஆண்டு கால பராம்பரியம் கொண்ட ‘தி ஹிடவதா’ பத்திரிகையின் தற்போதைய நிர்வாக ஆசிரியர் பன்வாரிலால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு புதிய துணைநிலை ஆளுநராக தேவேந்திர குமார் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். அதைப்போல் மேகாலயா ஆளுநராக கங்கா பிரசாத், அசாம் ஆளுநராக ஜெகதீஷ் முகி, அருணாச்சல பிரதேச ஆளுநராக பி.டி.மிஸ்ரா, பீஹார் ஆளுநராக சத்யபால் மாலிக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க