• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் கிராம மக்களுக்கு வெள்ளப்பெருக்கு குறித்த விழிப்புணர்வு முகாம்

September 28, 2017 தண்டோரா குழு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையில் வசிக்கும் பொதுமக்கள் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது குறித்து மாவட்ட வருவாய் ஆய்வாளர் தலைமையிலான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையையொட்டி இருக்கும் நெல்லித்துறை , ஜடையர்பாளையம், தேக்கம்பட்டி, உள்ளிட்ட 10 கிராமங்களில் வடகிழக்கு பருவ மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதை எதிர்கொள்வது சம்பந்தமான கூட்டம் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒவ்வொரு கிரமத்திலிருந்தும் பத்து பேர் வீதம் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் முதல் தகவல் தரும் நபர்களாக ஒரு கிராமத்திற்கு ஐந்து பெண்கள், ஐந்து ஆண்கள் என நீச்சல் தெரிந்தவர்கள் , முதலுதவி அளிக்க பயிற்சி பெற்றவர்கள், பாம்பு பிடிப்பவர்கள் மற்றும் திறமை வாய்ந்தவர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களுக்கு பேரிடர் சமயத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

இவர்கள் பேரிடர் சமயத்தில் மாவட்ட அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படும் தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தை 1077 என்ற எண்ணில் தொடர்புகொண்டு சொல்வார்கள். அதற்கு அடுத்த படியாக பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உதவுதல், நீர் வடிவதற்கான நடவடிக்கைகள் எடுப்பார்கள்.

மேலும், தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தின் சார்பாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய 21 கிராம மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க