• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சி.ஆர்.பீ.எப்-யின் பயிற்சி காலம் முடிந்து 100 வீரர்கள் நியமனம்

September 28, 2017 தண்டோரா குழு

சி.ஆர்.பீ.எப்–யின் 90வது அணியை சேர்ந்த 100 வீரர்கள்(சப் இன்ஸ்பெக்டர்கள்)பயிற்சி காலம் முடிந்து நேரடியாக பணிக்கு நியமிக்கப்பட்டார்கள்.

கோயம்புத்தூர் மத்திய பயிற்சி கல்லூரியில் புதன்கிழமை இதற்கான விழா நடைபெற்றது.இந்நிகழ்சியில் ராஜீவ்ராய்பட்நாகர், சி.ஆர்.பி.எப்-யின் முதன்மை இயக்குனர் கலந்துகொண்டார். அவர் 100 சப்இன்ஸ்பெக்டர்களின் அணிவகுப்பு மரியாதைகளை ஏற்றுகொண்டார். மேலும் நியமிக்கப்பட்ட வீரர்களுக்கு சான்றிதழ்களை மதிப்பாய்வு செய்து வழங்கினார்.

கோவை மத்திய பயிற்சி கல்லூரியில் பயிற்சியாளர்களுக்கு வெளிப்புற மற்றும் உள்ளரங்க பாடங்களில் பயிற்சி பாடத்திட்டம் அளிக்கப்பட்டது.அதே போல் தொழில்நுட்பத்தின் மிகமுக்கியமானஅறிவு, திறன் மற்றும் அணுகுமுறை பயிற்சியும் அளிக்கப்பட்டது.

மேலும் உள்நாட்டில் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய பயங்கரவாதத்துடன் தொடர்புடைய பாடங்களும் பயிற்றுவிக்கப்பட்டன.இவை தவிர காடுகளில் செயல்படும் எதிர்ப்பு சக்திகளை எதிர்க்கவும் பயிற்சி அளிக்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பயிற்சியின் போது திறம்பட செயல்பட்ட விகாஸ்யாதவ், சுர்னிமாசிங், கியான்பிரகாஷ்சிங், ஸ்வர்ணிமாசிங் மற்றும் பூஜாமிஸ்ரா ஆகியோகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும் படிக்க