• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மியான்மர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல்

September 27, 2017 தண்டோரா குழு

மியான்மர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் அதிரடியாக நுழைந்து நாகா பயங்கரவாத அமைப்பினரின் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர்.

இந்திய – மியான்மர் எல்லையில் இந்திய ராணுவம் தீவிரவாதிகள் முகாம் மீது அதிரடி தாக்குதல் நிகழ்த்தியுள்ளது.உளவுத்துறையின் தகவலை அடுத்து இன்று அதிகாலை 4.45 மணிக்கு தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.ராணுவத்தின் இந்த அதிரடி தாக்குதலில் நாகா தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இத்தாக்குதலில் தேசிய சோஷியலிச நாகாலாந்து கவுன்சில் இயக்கத்தை சேர்ந்த ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டதில் இந்திய தரப்பில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.70 இந்திய ராணுவ வீரர்களை கொண்ட படைப்பிரிவு இந்த துல்லியத் தாக்குதலில் ஈடுபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய தாக்குதலையும் சேர்த்து, மியான்மர் எல்லையில் துல்லிய தாக்குதல் இரண்டாவது முறையாக வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க