• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிங்காநல்லூர் உழவர்சந்தையில் எம்.எல்.ஏ நா.கார்த்திக் ஆய்வு

September 27, 2017

கோவை சிங்காநல்லூர் உழவர்சந்தையில் திமுக.,வின் கோவை மாநகர் தெற்கு மாவட்டச்செயலாளரும், சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது உழவர்சந்தையில் விளைபொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அவர் உறுதியளித்தார்.

“உழவர் சந்தையின் நடைபாதை பகுதியில் மழை காலங்களில் செல்வதற்கு சிரமமாக உள்ளதால் அதில் தார் சாலை அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கூறினார். இது தொடர்பாக எம்.எல்.ஏ நிதியிலிருந்து வரும் ஆண்டில் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்” என நா.கார்த்திக் தெரிவித்தார்.

மேலும் ஆய்வின் போது உடன் திமுக சிங்காநல்லூர் பகுதிக்கழகச் செயலாளர் எஸ்.எம்.சாமி,சிங்கை மு.சிவா,வட்டக்கழகச் செயலாளர் சிங்கை குணா ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க