September 26, 2017
தண்டோரா குழு
அனைத்து சிறப்பு காவல் படையும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பிக்களுக்கு டிஜிபி ராஜேந்திரன் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் பரபரப்பாக அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வநதுள்ளார். தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் முக்கிய சம்பவம் ஏதேனும் நிகழபோகிறதா என சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவின.இதனிடையே, சிறப்பு காவல்படை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற உத்தரவு வழக்கமானது தான் என்றும் இது குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் டிஜிபி ராஜேந்திரன் விளக்கமளித்துள்ளார்.