September 26, 2017
தண்டோரா குழு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்வதற்காக, அக்டோபர் 15 முதல் 17ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். மேலும்,கூட்ட நெரிசலை தவிர்க்க கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம், அண்ணாநகர், பூந்தமல்லி, கே.கே.நகர் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.மேலும்,வழக்கமாக இயக்கப்படும் 2275 பேருந்துகளுடன் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.