• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆட்டோவில் தவறவிட்ட பேக்கை ஒருமணி நேரத்தில் கண்டுபிடித்து ஒப்படைத்த போலீசார்

September 25, 2017 தண்டோரா குழு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தனது மனைவி கஸ்தூரிக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய தனது மகள் ஜெயலெட்சுமி மற்றும் மருமகள் சங்கரி ஆகியோருடன் வீட்டிலிருந்து ஆட்டோவில் ஏறி மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு இன்று காலை
சென்றனர்.

இதனிடையே அவர்கள் கொண்டுவந்த பணமுள்ள பேக்கை ஆட்டோவில் தவறவிட்டது தெரியவந்தது. சங்கரி என்பவர் மருத்துவமனை வாசலுக்கு வந்து மருத்துவமனை காவலாளியிடம் விசாரித்து அருகில் உள்ள மேலூர் சோதனை சாவடிக்கு சென்று அங்கு பணியில் இருந்த முதல் நிலை காவலர் ஜான்பாலிடம் தகவலை கூற, அவர் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், புதூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்.

காவல் துறையினர் உடனடியாக காவல் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறி, நகர் முழுவதும் உள்ள போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களை உஷார் படுத்தினார். மேலும்,மருத்துவமனைக்கு வந்து கண்காணிப்பு கேமராவை சோதனை செய்து அதில் பதிவான வாசகம் மற்றும் வாகன பதிவு எண்ணை வைத்து புதூர் பகுதி ஆட்டோ சங்க செயலாளர் நாகூர் ஹனீபாவிடம் காவல்துறையினர் விசாரித்ததில் அந்த ஆட்டோ புதூர் பகுதியை சேர்ந்த அன்வருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

அதன்பின் அன்வரிடம் விசாரிக்க அவர் வைத்துள்ள 5 ஆட்டோக்களில் இதுவும் ஒன்று என்பதும் ஆட்டோவின் டிரைவர் வைரமுத்து என்பதும் தெரியவந்தது. உடனடியாக ஆட்டோ ஓட்டுனரை தொடர்புகொண்டு பேசியதில் அவர் ஆட்டோவில் பேக் இருப்பதையும், இதுவரை பேக் இருப்பதை கவனிக்காமல் இருந்ததையும் தெரிவித்தார்.

பின்னர் ஆட்டோ ஓட்டுனரை மேலூர் சோதனை சாவடிக்கு வர சொல்லி பேக்கை சங்கரி என்பவரிடம் புதூர் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பாண்டியன் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் சங்கரி என்பவர் பேக்கை சோதனை செய்து பார்த்ததில் பணம் ரூ.69,100 சரியாக உள்ளது என்பதை தெரிவித்தார். சம்பவம் நடந்து தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்தில் பேக்கை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களை மதுரை மாநகர் காவல் ஆணையார் மகேஷ் குமார் அகர்வால் பாராட்டினார்.

மேலும் படிக்க