குடோன்களில் இருந்து வாடிக்கையாளர்கள் நேரடியாக பட்டாசுகள் வாங்க ஆதார் மற்றும் பான் எண் வேண்டும் என பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையடுத்து பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு அனைத்து வித பட்டாசு விற்பனைக்கும் ஜிஎஸ்டி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால் பட்டாசு உற்பத்தி குடோன்களில் கொள்முதல் செய்யும் விற்பனையாளர்கள், ஜிஎஸ்டி எண் மூலம் பட்டாசுகளை வாங்கி, பின் அதனை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர். எனினும் விற்பனையாளர்கள் அல்லாமல் சில வாடிக்கையாளர்கள் மொத்தமாக பட்டாசுகள் வாங்குவதற்காக குடோன்களுக்கு நேரடியாக செல்கின்றனர்.
இதையடுத்து அவர்களிடம் ஜிஎஸ்டி எண் இல்லாத காரணங்களால் அதற்கு பதிலாக ஆதார் மற்றும் பான் எண்கள் பெறப்படுகிறது என பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதன் மூலம் விற்பனையில் ஏற்படும் வரி சிக்கல்களை எளிதில் தவிர்க்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளன.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு