September 23, 2017
தண்டோரா குழு
மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா கைரேகை வைத்ததில் சிபிஐ விசாரணை தேவை என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில்,
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை யாரும் பார்க்கவில்லை என அமைச்சர் சீனிவாசன் கூறியுள்ளார். 3 தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் பி பார்மில் ஜெயலலிதா கையெழுத்து போட்டதும், கை ரேகை வைத்ததும் எப்படி என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா கைரேகை வைத்ததில் உடனே சிபிஐ விசாரணை தேவை எனவும் கூறியுள்ளார்.