September 23, 2017
தண்டோரா குழு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் பரோலை மேலும் ஒரு மாதம் நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன்
ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி ஒரு மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டிருந்தார். பேரறிவாளனின் ஒரு மாத பரோல் நாளையுடன் முடிவடைய உள்ளது.
இதையடுத்து பேரறிவாளனின் பரோலை நீடிக்க கோரி அவரது தாயார் அற்புதம்மாள் முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தார். இதனையடுத்து அவரது கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், பேரறிவாளன் பரோல் நீடிக்கப்பட்டதற்கான நகல் மத்திய புழல் சிறை தலைமை அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அக்டோபர் 24-ம் தேதி வரை பரோல் வழக்கப்பட்டிருக்கிறது. பேரறிவாளன் மற்றும் அவரது பெற்றோரின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டிருக்கிறது.