September 22, 2017
தண்டோரா குழு
கோவை செல்வபுரம் பகுதியில் பட்டப்பகலில் முன்விரோதம் காரணமாக இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை செல்வபுரம் பகுதியில் ஆட்டோ டிரைவர் ஆனந்தன் மற்றும் அவரது நண்பர் செல்வம் என்பவரை மர்ம நபர்கள் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைகாக மருத்துமனை கொண்டு வரும் வழியில் செல்வமும் உயிரிழந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் படுகொலை செய்யப்படதற்கு பலி வாங்கும் விதமாக தற்போது சிறையில் இருந்த வெளியில் வந்தவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த செல்வபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யா,பாபுஜி,மோகன்,சூர்யா ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பட்டப்பகலில் மக்கள் அதிகம் வசிக்க கூடிய செல்வபுரம் பகுதியில் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.