• Download mobile app
19 Jan 2026, MondayEdition - 3631
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இறால் மிளகு தொக்கு

September 22, 2017 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

இறால் – 1 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
தனியா தூள் – 2 ஸ்பூன்
கரம் மசாலா – 1 ஸ்பூன்
சீரகத் தூள் – 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
எண்ணெய் – 2 ஸ்பூன்
மிளகு – 2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
கொத்துமல்லி – அலங்கரிக்க
கடுகு – தாளிக்க

செய்முறை:

முதலில் மிளகை மிக்சியில் போட்டு ஒன்றிரண்டாக அடித்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சேர்த்து தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

தக்காளி சேர்த்து வதக்கவும். இவை அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் தனியா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். பின் இறால் சேர்த்து நன்றாக கலந்து விடவும். தண்ணீர் சேர்த்து இறாலை 10 நிமிடங்கள் வரை வேக விடவும்.

இறால் வெந்தவுடன் மிளகு தூள், சீரகத் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்துமல்லி தூவி இறக்கவும். சுவையான இறால் மிளகுத் தொக்கு தயார்.

மேலும் படிக்க