September 22, 2017
தண்டோரா குழு
ரயில் டிக்கெட்களை ஐஆர்சிடிசி இணையதளத்தில் புக்கிங் செய்யும் போது 7 வங்கி கார்டுகளை மட்டுமே உபயோகிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐஆர்சிடிசி இணையதளத்தில் அனைத்து வகையான டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக டிக்கெட்கள் புக்கிங் செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,இந்தியன் வங்கி,ஹெச்.டி.எப்.சி வங்கி,கனரா வங்கி,சென்ட்ரல் வங்கி,ஆக்சிஸ் வங்கி, மற்றும் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய ஏழு வங்கிகள் மூலமாக மட்டுமே புக்கிங் செய்ய முடியும் என்று ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.