• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்கம் ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி

September 22, 2017 தண்டோரா குழு

தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் திரும்ப பெறுவதாக தமிழக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, சபாநாயகர் தனபால் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.சபாநாயகர் தனபால் பிறப்பித்த இந்த உத்தரவுக்கு எதிராக தொடப்பட்ட வழக்கில் சபாநாயகரின் உத்தரவு ரத்து செய்யமறுக்கப்பட்டது.

இந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் பொதுநல மனுத்தாக்கல் செய்தார்.இம்மனுவில் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கத்தை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், இடைத்தேர்தல் நடத்த தடை கோரிய மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும் படிக்க