September 21, 2017
தண்டோரா குழு
தெரி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் ‘மெர்சல்’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது.
விஜய் மூன்று வித்யாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று சாதனை படைத்தது வருகிறது.
இந்நிலையில், படங்களை திருட்டு தனமாக இணையத்தளங்களில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் மெர்சல் படத்தை முதல் நாளில் எச்டி பிரிண்டாக இணையதளத்தில் வெளியிடப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.