September 21, 2017
தண்டோரா குழு
கமலஹாசன் அரசியலுக்கு வரவேண்டும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் இல்லத்தில் அவரை சந்தித்து பேசினார். பின்னர் கமல் மற்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய கமல்,
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் என்னை சந்தித்தது எனக்கு பெரிய பாக்கியம். ஊழலுக்கு எதிரானவர்கள் எல்லோரும் எனக்கு உறவினர்கள் என்றும் கெஜ்ரிவாலிடம் இருந்து தாம் கற்றுக்கொள்ளும் நிலையில் உள்ளதாகவும் கமல் கருத்து தெரிவித்துள்ளார்.
கெஜ்ரிவால் கூறும்போது,
நான் கமல்ஹாசனின் மிகபெரிய ரசிகன். நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் நேர்மையாக உள்ளனர்.இணைந்து செயலாற்றுவது குறித்தும் விவாதித்தோம். நேர்மைக்கும், துணிவுக்கும் பேர் போனவர் கமல்ஹாசன். இந்த நாடு பெரும் ஊழலையும் வகுப்புவாதத்தையும் எதிர்கொண்டுள்ளது. இந்த இரு பிரச்சனைகள் குறித்தும் விவாதித்துள்ளோம். நாட்டில் பெரும்பான்மையான மக்கள் வகுப்புவாதத்தை எதிர்க்கின்றனர். கமல் அரசியலுக்கு வரவேண்டும்.
இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.