September 20, 2017
தண்டோரா குழு
பிரிட்டனை சேர்ந்த மார்க் பியோமாண்ட் என்பவர் சைக்கிள் மூலம் உலகத்தை 79 நாட்களில் சுற்றி வந்து உலக சாதனை படைத்துள்ளார்.
பாரிஸில் இருந்து கடந்த ஜூலை மாதம் 2ம் தேதி தனது உலகம் சுற்றும் பயணத்தை தொடங்கினார் மார்க் பியோமாண்ட்.ஒவ்வொரு நாள் காலை சுமார் 3.3௦ மணியளவில் தனது சைக்கிள் பயணத்தை தொடங்கி, தினமும் 16 மணி நேரம் பயணம் செய்தார். 76 நாட்களில் 29,௦௦௦ கிலோமீட்டர் பயணம் செய்தார். மீதி இருந்த மூன்று நாட்களில் விமானம் மூலம் தனது பயணத்தை தொடர்ந்தார். அவர் சரியாக 78 நாட்கள் 14மணிநேரம் மற்றும் 14நிமிடங்களில் உலகத்தை சுற்றிய பிறகு பாரிஸ் வந்தடைந்தார்.
கடந்த 2008ம் ஆண்டு, இதே போன்று சைக்கிள் மூலம் 195 நாட்களில் உலகத்தை சுற்றி சாதனை படைத்தார். ஆனால்,இந்த சாதனையை நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த அண்ட்ரூ நிக்கல்சன் என்பவர் 123 நாட்களில் உலகத்தைச் சுற்றி அவருடைய சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கின்னஸ் உலக சாதனை அமைச்சகம், உலக சாதனை படைத்த மார்க்கிற்கு இரண்டு பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களை தந்து கவுரவப்படுத்தினர்.