September 19, 2017
தண்டோரா குழு
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதாவது, ஆளுநர், சபாநாயகர், முதல்வர் ஆகியோர் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடுவதாக கண்டனம். அரசு விழாக்களை அரசியல் மேடையாக்கும் அரசுக்கும், தலைமைச்செயலாளர், டிஜிபிக்கு கண்டனம் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் விவகாரத்தில் முதல்வர், சபாநாயகருக்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.