• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெரியார் பற்றி டுவிட்டரில் கேள்வி கேட்ட பத்திரிகைகளை பிளாக் செய்த ஓபிஎஸ், எடப்பாடி

September 18, 2017

நேற்றைய தினம் (செப்.17) தந்தை பெரியார் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள். இதனால் இவருக்கும் சமூக வலைதளங்களில் வாழ்த்து குவிந்தது.

பெரியாரின் பிறந்த நாள் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதைபோல் சமூக வலைதளங்களில் #HBDPeriyaar என்ற டேகிலும் ட்வீட், ஸ்டேட்டஸ்கள் போடப்பட்டு அது இந்திய அளவில் ட்ரெண்டானது. அதேசமயத்தில் பிரதமர் மோடிக்கும் #HBDNarendramodi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது. இருவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டாலின், லாலுபிரசாத், ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ட்விட்டரில் தங்கள் வாழ்த்துகளை பதிவு செய்திருந்தனர்.

அதேவேளையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடிக்கு ட்விட்டர் வாயிலாக தங்கள் வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.

இதற்கடையில், வட இந்திய தலைவர்கள் பலரும் தந்தை பெரியாருக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்திருக்கும் போது தமிழக முதல்வரும், துணை முதல்வரும் பெரியாருக்கு வாழ்த்து தெரிவிக்காதது பற்றி பத்திரிகையாளர்கள் சிலர் சுடிகாட்டினர். ஆனால், அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக பத்திரிக்கையாளர்கள் சபீர் அகமது, ஸ்டாலின், கவாஸ்கர் ஆகியோரை ட்விட்டரில் ப்ளாக் செய்துவிட்டது முதல்வர், துணைமுதல்வர் தரப்பு.

பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி முதல்வர் மற்றும் துணை முதல்வரை கேள்விகேட்ட வேறு சிலரது ஐடிகளும் ப்ளாக் செய்யப்பட்டன.

இதையடுத்து, தங்களை முதல்வர் துணை முதல்வர் பிளாக் செய்து விட்டதாக கூறி அந்த பத்திரிக்கையாளர்கள் மீண்டும் டுவீட் செய்துள்ளார். மேலும், எங்களை ஏன் பிளாக் செய்தீர்கள் என கேள்வியும் எழுப்பியுள்ளனர்.

அரசியல் தலைவர்கள் சமூக வலைதளங்களில் இன்றியமையாததாகிவிட்ட சூழ்நிலையில் தற்போது உருவாகியுள்ளது.

அதேசமயம் தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தங்களுக்கு வரும் பதில்களை கவனித்து அதற்கு பதில்களை அளிப்பது சமூகவலைதள வாசிகளிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது இந்த விவகாரம் சமூகவலைதளவாசிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிபிடத்தக்கது.

மேலும் படிக்க