September 18, 2017
தண்டோரா குழு
டிடிவி தினகரன் ஆதரவு பெற்ற 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் நீக்கம் செய்துள்ள நிலையில் நாளை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
டிடிவி தினகரன் ஆதரவு பெற்ற 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் சஸ்பெண்ட் செய்து அதிரடி உத்த்திரவு பிறப்பித்தார். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வரவேண்டும் என்று திடீரென்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குட்கா விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் மீதும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிகிறது. இதனால் திமுக எம்.எல்.ஏக்களின் ஆலோசனைக்கூட்டம் நாளை மாலை நடைபெறும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.