• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மகனின் சடலத்துடன் இரவு முழுவதும் சாலையில் தவித்த தாய்!

September 16, 2017 தண்டோரா குழு

தெலங்கானாவில் வீட்டின் உரிமையாளர் அனுமதிக்காததால், இரவு முழுவதும் மகனின் சடலத்தை சாலையில் வைத்து தாய் பரிதவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் தலைநகர் ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் ஈஸ்வரம்மா. அவர் தனது இரண்டு மகன்களுடன் குப்தா என்பவர் வாடகைக்கு தந்த ஒரு அறையில் வசித்து வருகிறார். அவருடைய மூத்த மகன் சுரேஷ்(1௦) டெங்கு காய்ச்சல் காரணமாக, மாநில அரசு நடத்தும் நிலோபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். ஆனால்,கடந்த புதன்கிழமை இரவு, அந்த சிறுவன் உயிரிழந்தான்.

இதனையடுத்து சுரேஷின் சடலத்தை ஈஸ்வரம்மா வீட்டிற்கு எடுத்து வந்தார்.ஆனால், டெங்கு காய்ச்சலால் இறந்த சுரேஷின் உடலை வீட்டுக்குள் கொண்டுவர கூடாது என வீட்டு உரிமையாளர் குப்தா மறுத்துவிட்டார்.இதனால் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு நோய்க் கிருமிகள் தொற்றும் எனக்கூறிய அவர் சிறுவனின் சடலத்தை வீட்டிற்குள் எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து, என்ன செய்வது என்று ஈஸ்வரம்மாவுக்கு தெரியவில்லை. அவருக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. இரவு முழுவதும் பெய்த மழையில் சுரேஷின் சடலத்தை வைத்துக்கொண்டு, அவருடைய இரண்டாவது மகனுடன் சாலை ஓரத்தில் அமர்ந்திருந்தார்.

அந்த பகுதியில் வசிக்கும் சிலர் காலை நடைபயிற்சி சென்றபோது, ஈஸ்வரம்மா மகனின் சடலத்துடன் சாலை ஓரத்தில் அமர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் சடலத்தை வைக்கும் சவபெட்டியும், அந்த பெட்டியை மூட கவர்கள் மற்றும் சுரேஷின் கடைசி சடங்குகளை செய்ய பண உதவியும் செய்தனர்.

இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட சமூக ஆர்வளர் அசூட் ராவ் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க