• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை

September 16, 2017 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக இருதய நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு நபருக்கு இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு அதை வெற்றிகரமாக முடித்து அரசு மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

இதுக்குறித்து கோவை அரசு மருத்தவமனை முதல்வர் அசோகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“சிலருக்கு குழந்தை பருவத்திலேயே மூட்டுகள் வீங்கி காய்ச்சல் ஏற்படும், இதனால் இருதயத்திற்கு செல்லும் ரத்த நாணங்கள்(வால்வு) பாதிக்கப்பட்டு மூச்சுதிணறல் ஏற்படும். இப்படிப்பட்ட சிரமங்களுடன் இருந்த இருவருக்கு அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைகளுக்கு 4 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது, அரசு மருத்துவமனையில் அரசு காப்பீட்டு திட்டம் மூலம் அறுவை சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இந்த வகை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. கோவையில் தொடர்ந்து, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இது போன்ற நவீன அறுவை சிகிச்சைகளை வரும் காலங்களில் மேற்கொள்வார்கள்.” என்றார்.

தேவராஜ் வயது 13, கனகராஜ் வயது 27 இவர்களுக்கு தான் அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த மருத்துவர்களுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் படிக்க