• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

11 ரூபாய் செலவில் நடைபெற்ற திருமணம்!

September 15, 2017 தண்டோரா குழு

பஞ்சாப் மாநிலத்தில் இந்திய ஆணுக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண்ணுக்கும் 11 ரூபாய் செலவில் திருமணம் நடைபெற்ற சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று பலர் சொல்வதை கேள்விப்பட்டிருப்போம்.
பல திருமணங்கள் கோடி கணக்கில் செலவழித்து, ஆடம்பரமாக நடைபெறுவதை கண்டிருப்போம். ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் ஒரு திருமணம் வெறும் 11 ரூபாயில் நடந்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபுல் நகரை சேர்ந்த நபிஜதா பரீஸ்டா என்னும் பெண் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சுற்றி பார்க்க வந்திருந்தார்.அப்போது அந்த மாநிலத்தின் நபா என்னும் நகரை சேர்ந்த ஜாஹித் அலி என்பவரை சந்தித்தார். அவரை பார்த்ததும் நபிஜதா தனது மனதை பறிகொடுத்தார். இருவரும் முதலில் நட்புடன் பழக ஆரம்பித்தனர். அவர்களுடைய நட்பு காதலாக மாறி, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

ஆனால் ஒரு இந்தியரை திருமணம் செய்துகொள்ள தனது பெற்றோர் சம்மதம் தெரிவிப்பார்களா? என்று நபிசாதா கலக்கமடைந்தார். உடனே, தன்னுடைய திருமண விருப்பம் குறித்து, அவருடைய பெற்றோருக்கு கடிதம் எழுதினார். அவர்களும் தங்கள் சம்மதத்தை மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவர்களுடைய திருமணம் செப்டம்பர் 9ம் தேதி பஞ்சாபில் நடைப்பெற்றது. அவர்களுடைய திருமணம் வெறும் 11 ரூபாய் செலவில் நல்ல முறையில் நடந்தது. அந்த 11 ரூபாயை அவர்கள் திருமணத்தை நடத்தி கொடுத்த மதகுருவுக்கும் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க